உயிர் தப்பிய 25,000 அமெரிக்க மக்கள்.. அதிரடி காட்டிய டிரம்ப் - கரீபியன் கடலில் சம்பவம்! - வீடியோ

5 படகுகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டு 27 பேர் கொல்லப்பட்டனர்.இந்தத் தாக்குதலில் எந்த அமெரிக்கப் படைகளுக்கும் எந்தப் பாதிப்பும் ஏற்படவில்லை.
உயிர் தப்பிய 25,000 அமெரிக்க மக்கள்.. அதிரடி காட்டிய டிரம்ப்  - கரீபியன் கடலில் சம்பவம்! - வீடியோ
Published on

அமெரிக்காவுக்குள் போதைப்பொருள் கடத் தப்படுவதை தடுக்க அதிபர் டிரம்ப் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்.

இதில் கரீபியன் கடல் பகுதியில் போதைப்பொருள் கடத்திய வெனிசுலா நாட்டு படகுகள் மீது அமெரிக்கா ராணுவம் தாக்குதல் நடத்தியது. 5 படகுகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டு 27 பேர் கொல்லப்பட்டனர்.

இந்த நிலையில் அமெரிக்காவை நோக்கி போதைப்பொருள் கடத்தி வந்த நீர்மூழ்கி கப்பல் மீது அமெரிக்கா அதிரடி தாக்குதல் நடத்தி உள்ளது.

இதுதொடர்பாக டிரம்ப் தனது சமூக வலைதள பக்கத்தில் கூறியதாவது, அமெரிக்காவை நோக்கி வந்து கொண்டிருந்த மிகப் பெரிய போதைப்பொருள் கடத்தும் நீர்மூழ்கிக் கப்பல் மீது தாக்குதல் நடத்தப்பட்டு அழிக்கப்பட்டது.

இந்தக் கப்பலில் பெரும்பாலும் பென்டானைல் மற்றும் பிற சட்டவிரோத போதைப்பொ ருட்கள் நிறைந்திருந்ததாக அமெரிக்க உளவுத்துறை உறுதிப்படுத்தியது.

மேலும் அதில் போதைப்பொருள் கும்பலை சேர்ந்த 4 பேர் இருந்தனர். இந்த தாக்குதலில் 2 பேர் கொல்லப்பட்டனர். மற்ற 2 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர். வழக்குத் தொடரப்பட்டு அவர்களின் சொந்த நாடுகளான ஈக்வடார் ,கொலம்பியாவுக்குத் திருப்பி அனுப்பப்படுகிறார்கள்.

இந்த நீர்மூழ்கிக் கப்பல் கரைக்கு வந்திருந்தால் அதில் உள்ள போதைப் பொருள் மூலம் சுமார் 25 ஆயிரம் அமெரிக்கர்கள் இறந்திருப்பார்கள்.

இந்தத் தாக்குதலில் எந்த அமெரிக்கப் படைகளுக்கும் எந்தப் பாதிப்பும் ஏற்படவில்லை. எனது கண்காணிப் பின் கீழ் நிலம் அல்லது கடல் வழியாக சட்டவிரோத போதைப்பொருள் கடத்தும் பயங்கரவாதிகளை அமெரிக்கா பொறுத்துக் கொள்ளாது" என்று தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com