கென்யாவில் சட்டவிரோதமாக எறும்புகள் விற்பனை... எதற்காக தெரியுமா? | Kenya

எறும்புகள் சீனா மற்றும் தாய்லாந்து போன்ற நாடுகளுக்குக் கடத்தப்பட இருந்தது தெரியவந்தது.
கென்யாவில் சட்டவிரோதமாக எறும்புகள் விற்பனை... எதற்காக தெரியுமா? | Kenya
Published on

வெளிநாடுகளில் எறும்புகளைக் கண்ணாடி கூண்டுகளில் அடைத்து, அவற்றின் சமூகக் கட்டமைப்பை ரசித்துப் பார்க்கும் பழக்கம் 'செல்லப்பிராணி' பிரியர்களிடையே அதிகரித்துள்ளது. இதற்காக ஒரு எறும்பு பல ஆயிரம் ரூபாய்க்கு விற்கப்படுகிறது.

யானை தந்தம் கடத்தப்படுவதைப் போல தற்போது அரிய வகை பூச்சிகளும் 'பயோ-பைரசி' முறையில் கடத்தப்படுவது அதிகரித்து வருகிறது.

கென்யா தலைநகர் நைரோபியில் உள்ள விமான நிலையத்தில் கடந்த வாரம் 2 ஆயிரம் உயிருள்ள எறும்புகளுடன் சீன நபர் ஒருவர் பிடிபட்டார். அவரிடம் நடத்திய விசாரணையில், கென்யாவைச் சேர்ந்த சார்லஸ் முவாங்கி என்பவர் இந்த எறும்புகளை வினியோகம் செய்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து முவாங்கியை கைது செய்த போலீசார் அவரது வீட்டில் அதிரடி சோதனை நடத்தினர். அங்கு ஊசிகளில் அடைக்கப்பட்ட 113 எறும்புகள் மற்றும் அடைக்கப்படாத 1,000 எறும்புகளைப் பறிமுதல் செய்தனர். இந்த எறும்புகள் சீனா மற்றும் தாய்லாந்து போன்ற நாடுகளுக்குக் கடத்தப்பட இருந்தது தெரியவந்தது.

X

Maalai Malar
www.maalaimalar.com