பிரம்மோஸ் ஏவுகணைகளை வியட்நாமுக்கு விற்கும் ஒப்பந்தம் கையெழுத்து

இந்த ஒப்பந்தத்தின் மொத்த மதிப்பு சுமார் ரூ.5,800 கோடி என்று கூறப்படுகிறது.
பிரம்மோஸ் ஏவுகணைகளை வியட்நாமுக்கு விற்கும் ஒப்பந்தம் கையெழுத்து
Published on

இந்தியாவில் தயாரிக்கப்படும் அதிவேக சூப்பர்சோனிக் க்ரூஸ் ஏவுகணையான 'பிரம்மோஸ்' ஏவுகணையை வியட்நாமுக்கு விற்பனை செய்வதற்கான ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.

சிங்கப்பூரில் நடைபெற்ற பாதுகாப்பு மாநாட்டில் வைத்து மத்திய பாதுகாப்பு செயலாளர் ராஜேஷ் குமார் சிங் இந்த அறிவிப்பை வெளியிட்டார்.

வியட்நாமுடன் பிரம்மோஸ் ஏவுகணைக்கான ஒப்பந்தம் அதிகாரப்பூர்வமாக கையெழுத்தாகியுள்ளது. இந்த ஒப்பந்தத்தின் மொத்த மதிப்பு சுமார் ரூ.5,800 கோடி என்று கூறப்படுகிறது.

இதனிடையே இந்தோனேசியா உடனும் பிரம்மோஸ் ஏவுகணை கொள்முதல் குறித்த பேச்சுவார்த்தைகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ளன. விரைவில் இந்த ஒப்பந்தமும் இறுதி செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

முன்னதாக 2022ஆம் ஆண்டில் பிலிப்பைன்ஸ் நாடு சுமார் 375 மில்லியன் டாலர் மதிப்பில் பிரம்மோஸ் ஏவுகணையை நாடு ஆகும். தற்பொழுது வியட்நாமும், விரைவில் இந்தோனேசியாவும் இந்த வரிசையில் இணையவுள்ளன.

சீனாவுடன் கடுமையான எல்லைப் பிரச்சனைகளை எதிர்கொண்டு வரும் வியட்நாம், பிலிப்பைன்ஸ், இந்தோனேசியா தங்களின் ராணுவப் பாதுகாப்பை பலப்படுத்தி வரும் வேளையில் இந்த ஒப்பந்தங்கள் முக்கியத்துவம் பெறுகின்றன.

X

Maalai Malar
www.maalaimalar.com