நியாயமற்ற கோரிக்கைகள்: உடன்படிக்கை எட்டப்படாதது குறித்து ஈரான் பதில் | Islamabad Talks

அமெரிக்காவின் நியாயமற்ற கோரிக்கையில் பேச்சுவார்த்தையின் முன்னெடுப்பை தடுத்தன என்று ஈரான் பதில் அளித்துள்ளது.
நியாயமற்ற கோரிக்கைகள்: உடன்படிக்கை எட்டப்படாதது குறித்து ஈரான் பதில் | Islamabad Talks
Published on

அமெரிக்கா- ஈரான் இடையிலான இடைக்கால போர் நிறுத்தம் கடந்த 7-ந்தேதி ஏற்பட்டது. அப்போது இரண்டு வாரத்திற்கு இரு நாடுகளும் போர் நிறுத்தத்திற்கு சம்மதம் தெரிவித்தன. அதனைத் தொடர்ந்து நிரந்தர போர் நிறுத்தத்திற்கான பேச்சுவார்த்தைக்கு பாகிஸ்தான் ஏற்பாடு செய்தது.

அதன்படி நேற்று அமெரிக்காவின் துணை அதிபர் ஜே.டி. வான்ஸ் தலைமையிலான அமெரிக்கா பிரதிநிதிகள் மற்றும் ஈரான் பிரதிநிதிகள் இடையே நேரடி பேச்சுவார்த்தை தொடங்கியது. இந்த பேச்சுவார்த்தை 21 மணி நேரம் நீடித்தது. என்றாலும் இறுதியில் எந்த உடன்படிக்கையும் ஏற்படவில்லை என அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வான்ஸ் தெரிவித்தார். அத்துடன் அமெரிக்கா புறப்பட்டுச் சென்றார்.

உடன்படிக்கை எட்டப்படாதது குறித்து ஈரான் கூறுகையில் "ஈரான் மக்களின் தேசிய நலனை கருத்தில் கொண்டு ஈரான் பிரதிநிதிகள் தொடர்ந்து 21 மணி நேரம் தீவிர பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அமெரிக்காவின் நியாயமற்ற கோரிக்கைகள் பேச்சுவார்த்தையின் முன்னெடுப்பை தடுத்தன" எனக் கூறியுள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com