தாரமங்கலம் அருகே தொழிலாளி வி‌ஷம் குடித்து பலி

தாரமங்கலம் அருகே வயிற்று வலி காரணமாக தொழிலாளி வி‌ஷம் குடித்து உயிரிழந்தார்.
தாரமங்கலம் அருகே தொழிலாளி வி‌ஷம் குடித்து பலி
Published on

தாரமங்கலம்:

சேலம் மாவட்டம் தாரமங்கலம் அருகே உள்ள கே.ஆர்.தோப்பூர், சந்தைப்பேட்டை பகுதியை சேர்ந்தவர் ஆறுமுகம் (வயது 44). கயிறு திரிக்கும் தொழிலாளி. இவருக்கு சக்திவேல், சந்தியா என 2 குழந்தைகள் உள்ளனர்.

இந்நிலையில், வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்த ஆறுமுகம், வாழ்க்கையில் வெறுப்படைந்து அரளி விதையை அரைத்து குடித்துவிட்டார். உயிருக்கு போராடிய அவரை, அவரது தம்பி ஏழுமலை மீட்டு சேலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

அங்கு சிகிச்சை பலனின்றி ஆறுமுகம் பரிதாபமாக இறந்தார். இந்த சம்பவம் குறித்து தாரமங்கலம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com