

மதுரை:
மதுரை ஆஸ்டின் பட்டியை அடுத்த கருவேலம் பட்டியைச் சேர்ந்தவர் அய்யன்அரசன் (வயது 25). இவர் அதே பகுதியில் வசிக்கும் கார்மேகம் என்பவரது மகளை அடிக்கடி கிண்டல் செய்து வந்துள்ளார்.
இதனை கார்மேகம் கண்டித்தார். இருப்பினும் அய்யன்அரசன் தொடர்ந்து கேலி செய்தாராம்.
இதனால் ஆத்திரம் அடைந்த கார்மேகம் உறவினர் கூல்பாண்டியுடன் சேர்ந்து அய்யன்அரசனை கத்தியால் சரமாரியாக குத்தினார்.
இது தொடர்பாக ஆஸ்டின்பட்டி போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து கார்மேகம், கூல்பாண்டி ஆகியோரை கைது செய்தனர்.