குழந்தை கடத்தல் கும்பல் என கருதி கோவில் பிரசாதம் கொடுத்த பெண் அடித்துக்கொலை

திருவண்ணாமலை மாவட்டத்தில் குழந்தை கடத்தல் கும்பல் என கருதி கோவில் பிரசாதம் கொடுத்த மூதாட்டி அடித்துக்கொல்லப்பட்ட சம்பவம் நடந்துள்ளது.
குழந்தை கடத்தல் கும்பல் என கருதி கோவில் பிரசாதம் கொடுத்த பெண் அடித்துக்கொலை
Published on

திருவண்ணாமலை:

திருவண்ணாமலை மாவட்டம் போளூர் அருகே உள்ள அத்திமூதிர் பகுதியில் இன்று கோவிலுக்கு வந்த 5 பேர் அங்கிருந்த குழந்தைகளுக்கு பிரசாதம் கொடுத்துள்ளனர். இதனை கண்ட அங்கிருந்தவர்கள் குழந்தை கடத்துவதற்காக அவர்கள் வந்துள்ளதாக கருதி 5 பேரையும் கடுமையாக தாக்கியுள்ளனர்.

இதில், ஒரு மூதாட்டி உயிரிழந்துள்ளார். மேலும், 4 பேர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

X

Maalai Malar
www.maalaimalar.com