சாத்தான்குளம் அருகே பெண்ணுக்கு கொலை மிரட்டல் விடுத்த தந்தை-மகன்கள் கைது

சாத்தான்குளம் அருகே கணக்கு வழக்கு பார்ப்பது சம்பந்தமான தகராறில் பெண்ணுக்கு கொலை மிரட்டல் விடுத்த தந்தை-மகன்கள் கைது செய்யப்பட்டனர்.
கைது
கைது
Published on

சாத்தான்குளம்:

சாத்தான்குளம் அருகே உள்ள பிரகாசபுரத்தை சேர்ந்தவர் வர்க்கீஸ். இவர் கட்டிட ஒப்பந்ததாரராக உள்ளார். இவரது மனைவி நிஷாந்தி (வயது28). அதே பகுதியை சேர்ந்தவர் அல்போன்ஸ் ராஜ் (66). இவர் கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு ஊர்தலைவராக இருந்தார்.

அப்போது வர்க்கீசுக்கும், அல்போன்ஸ் ராஜிக்கும் இடையே கணக்கு வழக்கு பார்ப்பது சம்பந்தமாக தகராறு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் சம்பவத்தன்று இது தொடர்பாக இருவருக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டதாக தெரிகிறது. இதையடுத்து அல்போன்ஸ் ராஜ், அவரது மகன்கள் அந்தோணி சுரேஷ் (27), அந்தோணி விக்னேஷ் (25) ஆகியோர் வர்க்கீஸ் வீட்டிற்கு சென்று அவரது மனைவியிடம் கொலை செய்து விடுவோம் என்று மிரட்டல் விடுத்தனர்.

உடனே நிஷாந்தி தட்டார்மடம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து அல்போன்ஸ் ராஜ் மற்றும் அந்தோணி சுரேசை கைது செய்தனர். தலைமறைவாக உள்ள அந்தோணி விக்னேசை தேடி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com