வடமதுரை அருகே மாயமான பெண் காதல் கணவருடன் போலீசில் தஞ்சம்

வடமதுரை அருகே சில நாட்களுக்கு முன் மாயமான பெண் தனது காதல் கணவருடன் போலீசில் தஞ்சமடைந்தார்.
வடமதுரை அருகே மாயமான பெண் காதல் கணவருடன் போலீசில் தஞ்சம்
Published on

வடமதுரை:

திருச்சி மாவட்டம் வையம்பட்டி அருகே போத்தாநாயக்கன் பட்டியை சேர்ந்தவர் விஜயலட்சுமி(வயது20). இவர் வடமதுரை அருகே உள்ள தனியார் மில்லில் வேலைபார்த்து வந்தார். கடந்த சில நாட்களுக்கு முன்பு விஜயலட்சுமி திடீரென மாயமானார். இதனால் அவரது உறவினர்கள் மில்பஸ்களை சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அவர்களை போலீசார் சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர். விஜயலட்சுமி மாயமானது குறித்து வழக்குபதிவு செய்து வடமதுரை போலீசார் அவரை தேடி வந்தனர்.

இந்நிலையில் விஜயலட்சுமி அதேமில்லில் வேலை பார்த்த வடமதுரை கன்னிமார்பாளையத்தை சேர்ந்த ரமேஷ் என்பவருடன் வடமதுரை போலீசில் தஞ்சமடைந்தார். இதுகுறித்து அவர் கூறுகையில், ரமேசை சில ஆண்டுகளாக காதலித்து வந்தேன். எங்கள் காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால் வீட்டைவிட்டு வெளியேறி பழனிமுருகன் கோவிலில் திருமணம் செய்து கொண்டோம்.

தற்போது போலீசார் தேடுவதை அறிந்து பாதுகாப்பு கேட்டு இங்கு வந்தோம் என்றார். போலீசார் இருவரும் மேஜர் என்பதால் இருவீட்டாரையும் அழைத்து சமரசபேச்சுவார்த்தை நடத்தி அனுப்பி வைத்தனர். #tamilnews

X

Maalai Malar
www.maalaimalar.com