பயிற்சியாளர் கும்ப்ளே மீது விராட் கோலி அதிருப்தி

இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக இருக்கும் கும்ப்ளே மீது கேப்டன் விராட் கோலி அதிருப்தி அடைந்து உள்ளார். அவரை சமாதானப்படுத்தும் முயற்சியில் தெண்டுல்கர், கங்குலி ஈடுபடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பயிற்சியாளர் கும்ப்ளே மீது விராட் கோலி அதிருப்தி
Published on

இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக கும்ப்ளே இருக்கிறார். சாம்பியன்ஸ் டிராபி கோப்பையுடன் அவரது ஒரு ஆண்டுகால பதவி முடிவடைகிறது.

கும்ப்ளேயின் பதவி காலம் மேலும் நீட்டிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் கிரிக்கெட் வாரியமோ அவரது பதவி காலத்தை நீட்டிக்க விரும்பவில்லை.

பயிற்சியாளர் பதவிக்கு விருப்பம் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவித்து இருந்தது. கும்ப்ளேயின் பயிற்சியாளருக்கான நேர்காணலில் கலந்து கொள்ளலாம் என்றும் அறிவித்தது. சம்பளத்தை உயர்த்தி வழங்குமாறு கேட்டுகொண்டதால் நீட்டிக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.

இந்த நிலையில் அணியின் பயிற்சியாளராக இருக்கும் கும்ப்ளே மீது கேப்டன் விராட் கோலி அதிருப்தி அடைந்து உள்ளார்.

கும்ப்ளே அளவுக்கு அதிகமான கட்டுப்பாடுகளை விதிப்பதால் கோலி தலைமையிலான சீனியர் வீரர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். வீரர்களுக்கான அறையில் சுதந்திரம் கொடுக்காமல் ஆணவமாக நடந்து கொள்கிறார். இதனால் வீரர்கள் தங்களது கருத்தை இயல்பாக தெரிவிக்க முடியவில்லை.

ரவிசாஸ்திரி இயக்குனராக இருந்த வீரர்கள் மகிழ்ச்சியுடன் இருந்தனர். அந்த நிலை தற்போது இல்லை. இதனால் சீனியர் வீரர்கள் கும்ப்ளே மீது அதிருப்தியில் உள்ளனர்.

நியூசிலாந்துக்கு எதிரான பயிற்சி ஆட்டம் முடிந்த பிறகு கும்ப்ளே குறித்து கங்குலியுடன் கோலி புகார் தெரிவித்து இருக்கிறார். மிகவும் நீண்ட நேரம் இது தொடர்பாக விவாதிக்கப்பட்டது.

சுப்ரீம் கோர்ட்டால் நியமிக்கப்பட்ட நிர்வாக குழு தலைவர் வினோத்ராய் இதுகுறித்து தெண்டுல்கர், கங்குலி, வி.வி.எஸ்.லட்சுமண் குழுவிடம் விவாதிக்கும். இந்த 3 பேர் கொண்ட குழு தான் பயிற்சியாளரை நியமனம் செய்யும்.

மேலும் தெண்டுல்கர், கங்குலி, லட்சுமண் ஆகியோர் கோலி - கும்ப்ளே இடையே ஏற்பட்டுள்ள மோதலை சமாதானப்படுத்தும் முயற்சியிலும் ஈடுபடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சாம்பியன்ஸ் டிராபி போட்டி நெருங்கும் நேரத்தில் கும்ப்ளே - கோலி மோதல் அணிக்கு பாதிப்பை ஏற்படுத்தும்.

2019 உலக கோப்பை வரை கும்ப்ளே பயிற்சியாளராக நீட்டிக்க கிரிக்கெட் வாரியத்தின் ஒரு தரப்பினர் முடிவு செய்து இருந்தனர். தற்போது கேப்டன் கோலி அவர் மீது அதிருப்தி தெரிவிப்பதால் கும்ப்ளே நீட்டிக்கப்பட வாய்ப்பு இல்லை.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com