விஜயகாந்த் சென்ற விமானத்தில் கோளாறு- மதுரையில் அவசரமாக தரையிறக்கம்

விஜயகாந்த் சென்ற விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதையடுத்து விமானம் மதுரையில் அவசரமாக தரையிறக்கப்பட்டது. #ThoothukudiShooting #VijayakanthFlight
விஜயகாந்த் சென்ற விமானத்தில் கோளாறு- மதுரையில் அவசரமாக தரையிறக்கம்
Published on: 

மதுரை:

தே.மு.தி.க. பொதுச்செயலாளர் விஜயகாந்த், அவரது மனைவியும் கட்சியின் மகளிரணி தலைவியுமான பிரேமலதா ஆகியோர் தூத்துக்குடியில் இருந்து இன்று பிற்பகல் ஸ்பைஸ் ஜெட் விமானத்தில் சென்னை புறப்பட்டனர். அந்த விமானத்தில் சசிகலா புஷ்பா எம்.பி. உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் என மொத்தம் 65 பேர் பயணம் செய்தனர்.

ஆனால் புறப்பட்ட சிறிது நேரத்தில் விமானத்தில் மதுரையை நெருங்கியபோது தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது. இதனை கண்டறிந்த விமானி, மதுரை விமான நிலையத்தில் விமானத்தை அவசரமாக  தரையிறக்குவதற்கு அனுமதி கோரினார். அனுமதி கிடைத்ததும், மதுரையில் விமானம் தரையிறக்கப்பட்டது. 

விமானத்தில் பயணித்த விஜயகாந்த், பிரேமலதா, சசிகலா புஷ்பா எம்.பி. உள்ளிட்ட அனைவரும் பத்திரமாக மீட்கப்பட்டனர்.

முன்னதாக, துப்பாக்கி சூட்டினால் காயமடைந்து தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை பிரேமலதா நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். #ThoothukudiShooting #VijayakanthFlight

X

Maalai Malar
www.maalaimalar.com