ஆழ்வார்திருநகரில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

ஆழ்வார்திருநகரில் நீட் தேர்வை ரத்து செய்ய கோரி விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்திய காட்சி.
விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்திய காட்சி.
Published on

தென்திருப்பேரை:

ஆழ்வார்திருநகரி காமராஜர் சிலை அருகில் விடுதலை சிறுத்தைகள் கட்சி முற்போக்கு மாணவர் கழகம் சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. முற்போக்கு மாணவர் கழக மாநில துணை செயலாளர் பாபாசாகிப் அருண் தலைமை தாங்கினார். நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும். மத்திய அரசின் புதிய கல்விக்கொள்கையை திரும்ப பெற வேண்டும் என்று வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது.

மாவட்ட செயலாளர் முரசு தமிழப்பன், மாவட்ட மகளிர் அணி துணை செயலாளர் தமிழ்செல்வி, கிறிஸ்தவ மேம்பாட்டு அமைப்பாளர் செங்கோல் மணி, நகர செயலாளர்கள் அய்யப்பன், மாணிக்கம், ஒன்றிய செயலாளர் பூலான் பாண்டியன், நகர அமைப்பாளர் முருக பெருமாள், ஒருங்கிணைப்பாளர் ஆறுமுகநயினார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com