

திருச்சியில் இன்று ம.தி.மு.க. மகளிரணி மாநில நிர்வாகிகள் மற்றும் மாவட்ட அமைப்பாளர் ஆலோசனை கூட்டம் மாநில மகளிரணி தலைவி டாக்டர் ரொஹையா ஷேக் முகமது தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ கலந்து கொண்டார்.
முன்னதாக அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
மருத்துவப்படிப்பிற்கான நீட் தேர்வில் தமிழகத்திற்கு மத்திய அரசு விதிவிலக்கு அளிக்கும் என்ற நம்பிக்கை இல்லை. இந்த விவகாரத்தில் உச்சநீதிமன்றத்தில் சமூக நீதி சாகடிக்கப்பட்டு விட்டது. நீட் தேர்வு விவகாரத்தில் மாணவர்கள் இது குறித்த உண்மை நிலையினை இன்னும் சரியாக அறியவில்லை.
மத்திய அரசு தமிழகத்தை இயக்குகிறது. தமிழக அரசும் மத்திய அரசின் திட்டங்களை எல்லாம் கண்மூடித்தனமாக ஆதரிக்கிறது. மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா இருந்தபோது மத்திய அரசின் திட்டங்களை எல்லாம் உடன்பாடு இல்லாத போது எதிர்த்தார்.
குறிப்பாக முல்லைப் பெரியாறு, காவிரி பிரச்சனை போன்ற விவகாரங்களில் எல்லாம் தமிழகத்தின் உரிமைகளுக்காக மத்திய அரசை எதிர்த்து வாதிட்டு சாதித்தார். இப்போது ஜெயலலிதா இருந்திருந்தால் ஜனாதிபதி, துணை ஜனாதிபதி தேர்தல்களில் பாரதிய ஜனதாவிற்கு ஆதரவு அளித்திருக்க மாட்டார்.
ஆனால் இப்போது அ.தி.மு.க. மத்திய அரசின் திட்டங்களை எல்லாம் ஆதரிக்கிறார்கள்.