ஈரானின் கொலைக்கார ஆட்சியாளர்களிடம் அணு ஆயுதங்கள் சிக்கிவிட கூடாது - டிரம்ப் எச்சரிக்கை

ஈரான் நாட்டை ஆட்சி செய்யும் கொலைக்கார அரசு அணு ஆயுதங்களை நெருங்க விடாதவாறு அமெரிக்க அரசு செயல்படும் என அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.#Iran #Trump #NuclearWeapons
ஈரானின் கொலைக்கார ஆட்சியாளர்களிடம் அணு ஆயுதங்கள் சிக்கிவிட கூடாது - டிரம்ப் எச்சரிக்கை
Published on

ஜெர்மனி நாட்டின் பிரதமரை நேற்று வாஷிங்டன் நகரில் உள்ள வெள்ளை மாளிகையில் சந்தித்துப் பேசிய டொனால்ட் டிரம்ப், அவருடன் கூட்டாக செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.

மத்திய கிழக்கு நாடுகளில் எங்கே எந்த பிரச்சனை என்றாலும் அதற்கு ஈரான் நாட்டின் தலையீடு காரணமாக உள்ளது. அணு ஆயுத பரவல் தடை ஒப்பந்தத்தை மீறிய வகையில் ஆபத்தான ஏவுகணைகளை தயாரிப்பதையும், பயங்கரவாதத்தை ஆதரிப்பதையும் நிறுத்தும்வரை, ஈரான் நாட்டின் கொலைக்கார ஆட்சியாளர்கள் அணு ஆயுதங்களை நெருங்க விடாதவாறு நாம் உறுதிப்படுத்த வேண்டும்.    

சிரியாவில் இருந்து ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாத இயக்கத்தை முழுவதுமாக துடைத்து எறிய அமெரிக்கா தலைமையிலான பன்னாட்டு கூட்டமைப்பு உறுதி பூண்டுள்ளது. ஆனால், இந்த வெற்றியை ஈரான் தனக்கு சாதகமாக்கி கொள்ளாத வகையில் நாம் விழிப்புடன் இருக்க வேண்டும்.

சிரியா மற்றும் லெபனானில் ஆதிக்கம் செலுத்த முயற்சிக்கும் ஈரானின் திட்டங்களை தடுத்து, தகர்க்க வேண்டும் என்னும் ஜெர்மனியின் கண்ணோட்டத்தில் நாமும் இணைந்திருக்கிறோம்.

மத்திய கிழக்கு நாடுகளில் வன்முறையையும், ரத்தக்களறியையும், குழப்பங்களையும் ஏற்படுத்திவரும் ஈரான் நாட்டின் ஆட்சியாளர்களைப் பற்றி இன்றைய சந்திப்பின்போது நானும் ஜெர்மனி பிரதமரும் விரிவாக ஆலோசித்தோம். ஈரானுக்கு எதிராக ராணுவ பலத்தை அமெரிக்கா பயன்படுத்துமா? என்பது தொடர்பாக இப்போது பேசுவது பொருத்தமாக இருக்காது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com