தெலுங்கானாவில் பாஜக உறுப்பினர் சேர்க்கையை தொடங்கி வைத்தார் அமித்ஷா

பா.ஜ.க. நிறுவனர் சியாமா பிரசாத் முகர்ஜியின் பிறந்தநாளை முன்னிட்டு, தெலுங்கானாவில் கட்சி உறுப்பினர் சேர்க்கையை பா.ஜ.க. தலைவரும் உள்துறை மந்திரியுமான அமித்ஷா இன்று தொடங்கி வைத்தார்.
அமித்ஷாவுக்கு உற்சாக வரவேற்பு
அமித்ஷாவுக்கு உற்சாக வரவேற்பு
Published on

ஐதராபாத்:

பா.ஜ.க. நிறுவனர் சியாமா பிரசாத் முகர்ஜியின் பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி நாடு முழுவதிலும் பா.ஜ.க. உறுப்பினர் சேர்க்கையையை தீவிரப்படுத்த முடிவு செய்யப்பட்டு, அதற்காக முகாம்களும் நடத்தப்படுகின்றன. இதில் அந்தந்த பகுதி பா.ஜ.க. நிர்வாகிகள் கலந்துகொண்டு, உறுப்பினர் சேர்க்கையை முன்னின்று நடத்தி வருகின்றனர்.

வாரணாசியில் இன்று நடைபெற்ற விழாவில் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொண்டு, பா.ஜ.க. உறுப்பினர் சேர்க்கையை தொடங்கி வைத்தார். மேலும், வாரணாசியில் மரக்கன்று நடும் திட்டத்தையும் தொடங்கி வைத்தார்.

இந்நிலையில், தெலுங்கானா மாநிலத்தில் பா.ஜ.க. உறுப்பினர் சேர்க்கையை அக்கட்சியின் தலைவரும், உள்துறை மந்திரியுமான அமித் ஷா இன்று மாலை தொடங்கி வைத்தார்.

இதற்காக ரெங்காரெட்டி மாவட்டம் சென்ற அமித்ஷா, அங்குள்ள பழங்குடியின பெண் வீட்டுக்கு சென்று மதிய உணவருந்தினார். அவருடன் முரளிதர் ராவ் உள்ளிட்ட பா.ஜ.க. நிர்வாகிகள் சென்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com