இரு எம்.எல்.ஏ.க்கள் பா.ஜ.க.வுக்கு தாவினர் - கோவா சட்டசபையில் காங்கிரஸ் செல்வாக்கு சரிந்தது

கோவா சட்டசபையில் அதிக உறுப்பினர்களை பெற்றிருந்த காங்கிரஸ் கட்சியை சேர்ந்த இரு எம்.எல்.ஏ.க்கள் இன்று பா.ஜ.க.வுக்கு தாவியதால் ஆளும்கட்சியின் பலம் கூடியுள்ளது. #CongressMLAsJoinBJP
இரு எம்.எல்.ஏ.க்கள் பா.ஜ.க.வுக்கு தாவினர் - கோவா சட்டசபையில் காங்கிரஸ் செல்வாக்கு சரிந்தது
Published on

பனாஜி:

40 இடங்களை கொண்ட கோவா சட்டசபைக்கு நடைபெற்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு 16 எம்.எல்.ஏ.க்களும், பா.ஜ.க.வுக்கு 14 எம்.எல்.ஏ.க்களும் கிடைத்தனர்.

இருப்பினும், அதிக இடங்களில் வெற்றிபெற்ற காங்கிரசால் அங்கு ஆட்சி அமைக்க முடியவில்லை. கோவா முற்போக்கு கட்சியை சேர்ந்த 3 எம்.எல்.ஏ.க்கள், மகாராஷ்டிரவாடி கோமந்தக் கட்சியை சேர்ந்த 3 எம்.எல்.ஏ.க்கள் மற்றும் 3 சுயேட்சை எம்.எல்.ஏ.க்களின் ஆதரவுடன் அங்கு பா.ஜ.க. ஆட்சியை பிடித்தது. 

23 உறுப்பினர்களின் ஆதரவுடன் பா.ஜ.க. தலைமையிலான அரசின் முதல் மந்திரியாக முன்னாள் ராணுவ மந்திரி மனோகர் பரிக்கர் பொறுப்பேற்றுள்ளார். எதிர்க்கட்சியாக காங்கிரஸ் உள்ளது.

இந்நிலையில், காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் சுபாஷ் ஷிரியோட்கர் மற்றும் தயாநந்த் சோப்டே ஆகியோர் இன்று டெல்லியில் பா.ஜ.க. தேசிய தலைவர் அமித் ஷாவை சந்தித்து தங்களை அக்கட்சியில் இணைத்து கொண்டனர். #GoaCongressMLAs  #CongressMLAsJoinBJP

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com