கத்தாரை தனிமைப்படுத்தியது ’மனிதாபிமானமற்ற செயல்’ - துருக்கி குற்றச்சாட்டு

கத்தார் நாட்டுடனான தூதரக உறவை சவுதி அரேபியா, பக்ரைன் உள்ளிட்ட நாடுகள் துண்டித்து அந்நாட்டை தனிமைப்படுத்தியது மனிதாபிமானமற்ற செயல் என்று துருக்கி குற்றம்சாட்டியுள்ளது.
கத்தாரை தனிமைப்படுத்தியது ’மனிதாபிமானமற்ற செயல்’ - துருக்கி குற்றச்சாட்டு
Published on

ஜ.எஸ்.தீவிரவாதிகளுக்கு மறைமுகமாக நிதி உதவி செய்வதாக குற்றம்சாட்டி கத்தாருடன் ஆன தூதரக உறவை சவுதி அரேபியா, பக்ரைன், எகிப்து, ஏமன், அமீரகம், லிபியா அரபு நாடுகள் துண்டித்தன.

இதனால் மேற்கண்ட நாடுகளுக்கிடையே விமானம் மற்றும் கப்பல் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. தூதர்கள் திரும்ப பெறப்பட்டனர். மேலும் கச்சா எண்ணெய் விலை உயரும் அபாயம் நிலவுகிறது. கத்தார் நாட்டில் உணவு பற்றாக்குறை ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது.

இந்நிலையில், கத்தார் நாட்டுடனான தூதரக உறவை சவுதி அரேபியா, பக்ரைன் உள்ளிட்ட நாடுகள் துண்டித்து அந்நாட்டை தனிமைப்படுத்தியது மனிதாபிமானமற்ற செயல் என்று துருக்கி குற்றம்சாட்டியுள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com