மார்த்தாண்டத்தில் லாரி மோதி ஒருவர் பலி

மார்த்தாண்டத்தில் லாரி மோதி ஒருவர் பலியான சம்பவம் தொடர்பாக மார்த்தாண்டம் போலீஸ் இன்ஸ்பெக்டர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
விபத்து
விபத்து
Published on

குழித்துறை:

மார்த்தாண்டம் அருகே பாகோடு கண்ணன்விளையை சேர்ந்தவர் அனிஷ் (வயது 22). இவர் மார்த்தாண்டம் பம்மத்தில் உள்ள ஒரு ஒர்க்‌ஷாப்பில் வேலை செய்து வந்தார். நேற்று முன்தினம் இரவு அனிஷ் மோட்டார் சைக்கிளில் மார்த்தாண்டத்தில் இருந்து களியக்காவிளை நோக்கி சென்று கொண்டு இருந்தார். பின்னால் பாறசாலை இஞ்சிவிளை புதுவல்பிலாவிளையை சேர்ந்த ரகீம் (50) என்பவர் உட்கார்ந்து பயணம் செய்தார். மார்த்தாண்டம் மேம்பாலம் சந்திப்பில் செல்லும் போது, பின்னால் வந்த லாரி மோதியது. இதனால் மோட்டார் சைக்கிளில் இருந்த அனிஷ், ரகீம் ஆகிய இருவரும் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தனர். அவர்களை மார்த்தாண்டத்தில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலன் இல்லாமல் ரகீம் நேற்று பரிதாபமாக இறந்தார்.

இந்த விபத்து குறித்து மார்த்தாண்டம் போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் படந்தாலுமூடு பகுதியை சேர்ந்த அருள்தாஸ் (54) என்பவர் மீது போலீஸ் இன்ஸ்பெக்டர் சுரேஷ்குமார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com