டெல்லியில் கனமழை எதிரொலி - போக்குவரத்து பாதிப்பு

தலைநகர் டெல்லியில் பெய்து வரும் கனமழை எதிரொலியாக சாலை போக்குவரத்து கடுமையாக பாதிப்பு அடைந்துள்ளது என அதிகாரிகள் தெரிவித்தனர்.
மழையில் நனைந்தபடி செல்லும் வாகன ஓட்டிகள்
மழையில் நனைந்தபடி செல்லும் வாகன ஓட்டிகள்
Published on

புதுடெல்லி:

தலைநகர் டெல்லியில் நேற்று இரவு முதல் பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் தாழ்வான இடங்களில் வெள்ள நீர் சூழ்ந்துள்ளது.

டெல்லி கேஜி மார்க் பகுதியில் பெய்த மழையால் சாலைகளில் வெள்ளம் சூழ்ந்தது. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டு பள்ளி, கல்லூரி

மற்றும் அலுவலகம் செல்வோர் கடும் அவதிக்கு உள்ளாகினர்.

இன்று காலை 8.30 மணி நிலவரப்படி டெல்லி சப்தர்ஜங் வானிலை மைய பகுதியில் 12.6 மிமீ, பாலம் வானிலை மைய பகுதியில் 38.5 மிமீ பதிவாகி உள்ளது என அதிகாரிகள் தெரிவித்தனர். 

X

Maalai Malar
www.maalaimalar.com