மேற்குவங்க அரசுப் பள்ளிகளில் வந்தே மாதரம் கட்டாயம் - முதலமைச்சர் உத்தரவு

பள்ளிக் கல்வித்துறையின் கீழ் செயல்படும் அனைத்து பள்ளிகளிலும் வந்தே மாதரத்தை கட்டாயமாக்கிய மேற்குவங்க முதல்வர்
மேற்குவங்க அரசுப் பள்ளிகளில் வந்தே மாதரம் கட்டாயம் - முதலமைச்சர் உத்தரவு
Published on

மேற்கு வங்கத்தில் பள்ளி கல்வித் துறையின் கீழ் செயல்படும் அனைத்து பள்ளிகளிலும் “வந்தே மாதரம்” என்ற தேசியப் பாடல் கட்டாயமாக்கப்பட்டு உள்ளதாக அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

இதுகுறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள மேற்குவங்க முதல்வர் சுவேந்து அதிகாரி, மேற்கு வங்கத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் காலை வழிபாடு நேரத்திலும், பள்ளி தொடங்குவதற்கு முன்பும் வந்தே மாதரம் பாடல் கட்டாயமாக்கபட்டு உடனடியாக நடைமுறைக்கு வருவதாக பதிவிட்டுள்ளார்.

கடந்த பிப்ரவரி மாதம் தேசிய கீதமான ஜன கன மன பாடலுக்கு இணையான அந்தஸ்தை வந்தே மாதரம் பாடலுக்கு மத்திய அரசு வழங்கி இருந்தது.

அதன்படி மேற்குவங்கத்தில் உள்ள அனைத்து அரசு பள்ளி நிகழ்வுகளிலும் தேசிய கீதத்துடன், வந்தே மாதரம் பாடலையும் கட்டாயமாக்கி அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com