

தமிழக வெற்றிக் கழகத்துக்கு இரு கம்யூனிஸ்டு கட்சிகளும் தங்களது ஆதரவு கடிதங்களை அளித்துள்ளன. இதையடுத்து அவர்களுக்கு நன்றியினை தெரிவிக்க தவெக தலைவர் திரு விஜய், தி.நகரில் உள்ள கம்யூனிஸ்டு கட்சி மற்றும் மார்க்சிஸ்ட் கட்சி அலுவலகத்துக்கு சென்றார்.
சண்முகம்அவர்கள் விஜய்யை வாசல் வரை வந்து வரவேற்றார். பின்னர் கம்யூனிஸ்டு தலைவர்களுக்கு பூங்கொத்து கொடுத்து நன்றி தெரிவித்த பின் அவர்களுடன் ஒன்றாக அமர்ந்து கலந்துரையாடினார்.
இதனை தொடர்ந்து விஜய் அவர்கள் நல்லகண்ணு ஐயா அவர்களின் புகைப்படத்துக்கும் மரியாதை செலுத்தினார்.
பின்னர் கார்ல் மார்க்ஸ் சிலைக்கு மரியாதை செலுத்தி தனது நன்றிகளை விஜய் அவர்கள் தெரிவித்துள்ளார் .