

ஈரானை சேர்ந்த போயிங் 747 விமானம் பாகிஸ்தான் கராச்சி விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்ட நிகழ்வு தற்போது இணையத்தில் வெளியாகி விவாவதத்தை ஏற்படுத்தியுள்ளது.
தெஹ்ரான் மற்றும் வாஷிங்டன் இடையே அமைதி ஒப்பந்தம் ஏற்பத்தும் தூதுவராக ஈரான் செயல்பட்டு வருகின்றது. இந்த நிலையில் இஸ்லாமாபாத்தில் ஈரானின் விமானங்கள் தரையிறங்கிய காணொளி தற்போது இணையத்தில் வெளியாகி உள்ளது.
கடந்த ஏப்ரல் மாதம் ஈரானை சேர்ந்த RC-130H போர் விமானம் பாகிஸ்தானில் உள்ள நூர் கான் விமான தளத்தில் தரையிறக்கப்பட்ட போது, அப்போது எடுக்கப்பட்ட செயற்கைக்கோள் புகைப்படங்கள் வலைதளங்களில் வெளியாகி இருந்தது.
இந்நிலையில் பாகிஸ்தானில் தரையிறக்கப்பட்ட ஈரான் போர் விமானம், கடந்த ஒரு மாதமாக அங்கேயே நிறுத்தி வைக்கப்பட்துள்ளதாக டேமியன் சைமன் என்ற ஆய்வாளர் தெரிவித்துள்ளார்.
இதையடுத்து பாகிஸ்தானை குறித்து எச்சரிக்கையாக இருக்கும்படி அமெரிக்காவை சேர்ந்த பாதுகாப்பு செயலகத்தில் அந்நாட்டு செனட் அதிகாரி கிரஹாம் தெரிவித்துள்ளார்.