

பிரேசில் அதிபர் லூலா டி சில்வா, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் உடன் வெள்ளை மாளிகையில் நடத்திய முக்கிய பேச்சுவார்த்தைக்குப் பிறகு, கியூபா மீது படையெடுக்கும் எண்ணம் அமெரிக்காவிற்கு இல்லை என்று பத்திரிக்கையாளர் சந்திப்பில் கூறியுள்ளார்.
சுமார் இரண்டரை மணி நேரத்திற்கும் மேலாக நடந்த இந்த சந்திப்பில், இருநாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு உறவுகள், லத்தீன் அமெரிக்க பிராந்தியத்தில் நிலவும் அரசியல் சூழல் மற்றும் பிராந்திய பாதுகாப்பு குறித்த பல்வேறு ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டது.
மேலும் குறிப்பாக கியூபா தொடர்பான வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக, டிரம்ப் நிர்வாகம் அமைதியான வழிமுறைகளையே கையாள விரும்புவதாக லூலா உறுதிபடத் தெரிவித்துள்ளார்.
1959ஆம் ஆண்டு கியூபா விடுதலை அடைந்ததற்கு பிறகு, அண்டை நாடுகளுக்கு இடையிலான மோதல் போக்கு குறைந்து, பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண்பதையே பிரேசில் விரும்புவதாகவும், அமெரிக்காவின் இந்த நிலைப்பாடு லத்தீன் அமெரிக்காவில் தேவையற்ற பதற்றத்தைத் தவிர்க்க உதவும் என்றும் அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும், சர்வதேச சந்தை மற்றும் பிராந்திய வர்த்தகத்தில் இதுபோன்ற முடிவுகள் நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதால், இந்த அறிவிப்பு உலகெங்கிலும் உள்ள அரசியல் விமர்சகர்கள் மற்றும் பொதுமக்களிடையே பெரும் கவனத்தைப் பெற்றுள்ளது.