Today Rasipalan | இன்றைய ராசிபலன் 14.6.2026: இந்த ராசிக்காரர்களுக்கு வரவு திருப்தி தரும்

மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கான இன்றைய ராசிபலன்களைக் காணலாம்.
Rasipalan
Published on

மேஷம்

ஒற்றுமை பலப்படும் நாள். பணத்தேவைகள் பூர்த்தியாகும். கடந்த இரண்டு நாட்களாக நடைபெறாமல் இருந்த காரியம் இன்று நடைபெறும்.

ரிஷபம்

வியாபார முயற்சி வெற்றி தரும். அடுத்தவர் நலனில் அக்கறை எடுத்துக் கொள்வீர்கள். எண்ணங்கள் நிறைவேற நண்பர்கள் கைகொடுத்து உதவுவர்.

மிதுனம்

குடும்பப் பிரச்சனைகள் முடிவிற்கு வரும். வியாபார விருத்திக்கு நண்பர்களின் ஒத்துழைப்பு கிட்டும். உத்தியோக மாற்றம் உறுதி ஆகலாம்.

கடகம்

முக்கிய புள்ளிகளின் சந்திப்பால் முன்னேற்றம் கூடும் நாள். விலை உயர்ந்த பொருட்களை வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். உத்தியோகத்தில் பணி உயர்வு ஏற்படலாம்.

சிம்மம்

நட்பால் நல்ல காரியம் நடைபெறும் நாள். வாகன மாற்றம் பற்றி சிந்திப்பீர்கள். குடும்பத்தினர்கள் உங்கள் குணமறிந்து நடந்து கொள்வர்.

கன்னி

உள்ளம் மகிழும் செய்தி ஒன்றை உடன்பிறப்புகள் வழியில் கேட்கலாம். இடம் சம்பந்தமான முயற்சி வெற்றி பெறும்.

துலாம்

யோசித்துச் செயல்பட வேண்டிய நாள். நட்பு பகையாகும். வரவைவிட செலவு கூடும். அலைச்சலுக்கேற்ற ஆதாயம் கிடைக்காது.

விருச்சிகம்

வரவு திருப்தி தரும். வெளிவட்டாரப் பழக்கம் விரிவடையும். பிள்ளைகளின் எதிர்கால நலன் கருதி எடுத்த முயற்சி வெற்றி பெறும்.

தனுசு

மகிழ்ச்சி கூடும் நாள். மங்கல செய்தி இல்லம் தேடி வரும். இடமாற்றம் பற்றி சிந்திப்பீர்கள். பொருளாதார முன்னேற்றம் கருதி புதிய முயற்சியில் ஈடுபடுவீர்கள்.

மகரம்

சந்தோஷ வாய்ப்புகளைச் சந்திக்கும் நாள். புதிய நண்பர்களின் அறிமுகம் கிடைக்கும். விலகிச் சென்றவர்கள் விரும்பி வந்து சேருவர்.

கும்பம்

நிம்மதி கிடைக்க நிதானத்துடன் செயல்பட வேண்டிய நாள். நேற்றைய பிரச்சனை இன்று நல்ல முடிவிற்கு வரும். உத்தியோகத்தில் உழைப்பிற்கேற்ற பலன் கிட்டும்.

மீனம்

முயற்சியில் வெற்றி கிட்டும் நாள். உங்கள் பொறுமைக்கு இன்று பெருமை கிடைக்கும். உத்தியோகம் சம்பந்தமாக எடுத்த புது முயற்சி பலன் தரும்.

X

Maalai Malar
www.maalaimalar.com