பிரபல தயாரிப்பாளர் ஆர்.பி. சௌத்ரி சாலை விபத்தில் உயிரிழப்பு!

தயாரிப்பாளும், நடிகர் ஜீவாவின் தந்தையுமான ஆர்.பி.சௌத்ரி சாலைவிபத்தில் உயிரிழந்தார்.
பிரபல தயாரிப்பாளர் ஆர்.பி. சௌத்ரி சாலை விபத்தில் உயிரிழப்பு!
Published on

பிரபல திரைப்படத் தயாரிப்பாளரும், நடிகர் ஜீவாவின் தந்தையுமான ஆர்.பி. சௌத்ரி, ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் இன்று நடந்த வாகன விபத்தில் காலமானார்.

ராஜஸ்தானில் உள்ள தனது சொந்த ஊரான உதய்பூருக்குச் சென்றபோது நடந்த கார்விபத்தில் படுகாயம் அடைந்த நிலையில், மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

'சூப்பர் குட் பிலிம்ஸ்' நிறுவனத்தின் தலைவரான இவர், 'புது வசந்தம்', 'நாட்டாமை', 'பூவே உனக்காக', 'ஆனந்தம்', 'திருப்பாச்சி' உள்ளிட்ட பல வெற்றித் திரைப்படங்களைத் தயாரித்துள்ளார்.

இவரது மகன்கள் ஜீவா மற்றும் ஜித்தன் ரமேஷ் ஆகியோர் தமிழ்த் திரையுலகில் நடிகர்களாக உள்ளனர். தமிழ் மற்றும் தெலுங்குத் திரையுலகில் இவர் ஆற்றிய பணிக்காக மூன்று முறை ஃபிலிம்பேர் விருதுகளை வென்றுள்ளார்.

இவரது மறைவு திரையுலகினரிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், பலரும் தங்கள் இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர்.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com