ஐஸ்வர்யா ராஜேஷின் ‘ஓ சுகுமாரி’ வெளியீட்டு தேதி அறிவிப்பு!

ஜூலை.17ம் தேதி தமிழ், தெலுங்கு, கன்னட மொழிகளில் படம் வெளியாகிறது.
ஐஸ்வர்யா ராஜேஷின் ‘ஓ சுகுமாரி’ வெளியீட்டு தேதி அறிவிப்பு!
Published on

பரத் தர்ஷன் இயக்கத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ், திருவீர் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளப் படம் ஓ சுகுமாரி.

இப்படத்தில் இவர்களுடன் ஜான்சி, விஷ்ணு, ஆமணி, முரளிதர் கௌட், ஸ்ரீநிவாஸ் காவிரெட்டி, கோட்டா ஜெயராம் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

கங்கா என்டர்டெயின்மென்ட்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்திற்கு, பரத் மஞ்சிராஜு இசையமைத்துள்ளார். இது ஒரு கலகலப்பான மற்றும் மாறுபட்ட பாணியில் உருவாகியுள்ள காதல் மற்றும் நகைச்சுவைத் திரைப்படமாகும். சமீபத்தில் இதன் டீசர் வெளியாகி வரவேற்பை பெற்றது.

இந்நிலையில் படம் ஜூலை.17ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. படம் தெலுங்​கு, தமிழ், மலை​யாளம், கன்​னட மொழிகளில் வெளியாகிறது.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com