

ஆபரேஷன் சிந்தூரில் இந்திய முப்படைகள் மேற்கொண்ட நடவடிக்கைகள் குறித்து, இந்திய ராணுவ உயர் அதிகாரிகள் செய்தியாளர்களிடம் ஆங்கிலத்தில் பேசினார்கள். இதுகுறித்து விமர்சனம் செய்த பாகிஸ்தான் லெப்டினட் ஜெனெரல் அகமது செரிஃப் செளத்ரியை, தற்போது சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.
பாகிஸ்தான் தீவிரவாதிகளால் கடந்த ஆண்டு ஜம்மு கஷ்மீர் அடுத்த பாஹல்காம் பகுதியில், 26 அப்பாவி இந்திய பொதுமக்கள் கொல்லப்பட்டனர். இதற்கு பதிலடி தரும் விதமாக ஆபரேஷன் சிந்தூரை மேற்கொண்ட இந்திய ராணுவம், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு எல்லையில் குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தினர்.
ஆபரேஷன் சிந்தூர் நடந்து ஓராண்டு நிறைவடைந்ததை தொடர்ந்து, எவ்வாறு பாகிஸ்தான் தீவிரவாத அமைப்புகள் மீது தாக்குதல் சம்பவம் நடத்தப்பட்டது என்பது குறித்து, பத்திரிக்கையாளர் சந்திப்பில் இந்திய முப்படை அதிகாரிகள் ஆங்கிலத்தில் உரையாடினார்கள்.
இந்நிலையில், இந்த சம்பவம் குறித்து விமர்சனம் செய்துள்ள பாகிஸ்தான் ராணுவ அதிகாரி, “ யார் உங்களை ஆங்கிலத்தில் பேச சொன்னார்கள். இவ்வாறு தான் தாக்குதல் சம்பவம் நடத்தினோம் என்று நீங்கள் கூறும்போது, எதற்காக ஆங்கிலத்தில் உரையாடினீர்கள்” என்று கூறியுள்ளார்.
இதையடுத்து பாகிஸ்தான் ராணுவ அதிகாரியின் கருத்திற்கு பல்வேறு தரப்பிலிருந்தும் விமர்சனங்கள் எழுந்து வருகின்றன. இதுகுறித்து சமூகவலைதளத்தில் பதிவிட்டுள்ள நெட்டிசன்கள், பாகிஸ்தான் ஊடகத்துறையில் ஏன் ஆங்கிலத்தில் மட்டும் உரையாடல் நடக்கிறது என்றும் இந்திய மக்கள் படித்தவர்கள் என்றும் பதிலளித்து வருகின்றனர்.