நீட் தேர்வு ரத்து செய்யப்பட்டதால் மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட மாணவர்

ஏற்கனவே இரண்டு மாணவர்கள் தற்கொலை செய்து கொண்ட நிலையில், ராஜஸ்தானை சேர்ந்த மற்றொரு மாணவரும் தற்கொலை
நீட் தேர்வு ரத்து செய்யப்பட்டதால் மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட மாணவர்
Published on

இந்த ஆண்டிற்கான நீட் தேர்வு ரத்து செய்யப்பட்டதால் ஏற்கனவே இரண்டு மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டதை தொடர்ந்து, ராஜஸ்தானை சேர்ந்த மற்றொரு மாணவரும் மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

ராஜஸ்தானைச் சேர்ந்த பிரதீப் மேக்வால் என்ற மாணவர் தனது இரண்டு சகோதரிகளுடன் சிகார் நகரில் உள்ள தனியார் பயிற்சி நிறுவனத்தில் மருத்துவ நுழைவுத் தேர்வுக்குத் தயாராகி வந்துள்ளார்.

சமீபத்தில் நடந்து முடிந்த நீட் தேர்வு ரத்து செய்யப்பட்டதால் கடும் மன உளைச்சலில் மாணவர் இருந்துள்ளார். இந்த நிலையில் வீட்டில் யாரும் இல்லாதபோது தனது சகோதரியின் துப்பட்டாவால் மின்விசிறியில் தூக்கிட்டு பிரதீப் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

இது குறித்து பேட்டியளித்த மாணவரின் தந்தை, “அவன் தேர்வு நன்றாக எழுதி உள்ளதாக கூறினான். மேலும் 650 மதிப்பெண் பெற்று, நிச்சயமாக மருத்துவம் படிக்க செல்வேன்”, என்று கூறியுள்ளார்.

இந்த சம்பவத்திற்கு வருத்தம் தெரிவித்துள்ள ராஜஸ்தானின் முன்னாள் துணை முதல்வர் சச்சின் பைலட், “மாணவர் பிரதீப்பின் தற்கொலை மிகுந்த வேதனை அளிக்கிறது.

அதேபோல், கோவா மற்றும் உத்தரப் பிரதேச மாநிலங்களிலும் மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டதாக வரும் செய்திகள் மனதை மிகவும் கலக்கமடையச் செய்கின்றன”, என்று பதிவிட்டுள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com