ஆப் ஸ்டோரில் இருந்து ஓலா, உபர், ரேபிடோவை நீக்க வலியுறுத்திய மகாராஷ்டிரா

போக்குவரத்து விதிகளை முறையாக பின்பற்றாததால் உயிரிழப்பு ஏற்படுவதாக மகாராஷ்டிர அரசாங்கம் குற்றம்சாட்டியுள்ளது.
ஆப் ஸ்டோரில் இருந்து ஓலா, உபர், ரேபிடோவை நீக்க வலியுறுத்திய மகாராஷ்டிரா
Published on

மகாராஷ்டிராவில் மோட்டார் வாகன சட்டத்தின் விதிகளை முறையாக பின்பற்றாமல் செயல்படும் ஓலா, உபர் மற்றும் ரேபிடோ போன்ற செயலிகளை தங்களது ஆப் ஸ்டோர்களில் இருந்து நீக்குமாறு கூகுள் மற்றும் ஆப்பிள் நிறுவனங்களுக்கு மகாராஷ்டிர அரசு கடிதம் எழுதியுள்ளது.

அந்த கடிதத்தில், "ஓட்டுநர் சரிபார்ப்பு வழிமுறைகள், காப்பீட்டுப் பாதுகாப்புகள், பெண்களின் பாதுகாப்பு நடவடிக்கைகள் மற்றும் அவசரகால பதில் அமைப்புகள் ஆகியவை மிகவும் போதுமானதாக இல்லை.

சமீபத்தில் இதுபோன்ற செயலிகளில் ஒன்றின் மூலம் இயக்கப்பட்ட பைக் டாக்ஸி சேவையால் ஒரு பெண் பரிதாபகரமாக உயிரிழந்தார்.

மகாராஷ்டிராவின் பல்வேறு பகுதிகளில் இதுபோன்ற பல குற்றவியல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது" எனக் குறிப்பிட்டுள்ளது.

மேலும் அந்த கடிதத்தில் “உரிய நேரத்தில் நடவடிக்கை எடுக்கத் தவறியதன் காரணமாக ஏதேனும் சட்டவிரோதமான அல்லது இடையூறு விளைவிக்கும் சம்பவம் ஏற்பட்டால், அதற்கு நீங்களே பொறுப்பாவீர்கள்" என்றும் தெரிவித்துள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com