தெலங்கானாவில் மத்திய அமைச்சரின் மகன் மீது போக்சோ சட்டத்தில் வழக்கு பதிவு

பாதிக்கப்பட்ட பெண்ணை தொடர்ந்து வாட்ஸ்அப் மூலம் உடல் உறவுக்கு வற்புறுத்தியதாக காவல் நிலையத்தில் புகார்
தெலங்கானாவில் மத்திய அமைச்சரின் மகன் மீது போக்சோ சட்டத்தில் வழக்கு பதிவு
Published on

தெலங்கானா மாநிலத்தில் மத்திய அமைச்சர் பண்டி சஞ்சயின் மகனான பகீரத் என்பவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

இதுகுறித்து பாதிக்கப்பட்ட பெண்ணின் தாயார் அளித்த புகாரில், “ நாங்கள் சாதாரன குடும்பத்தை சேர்ந்தவர்கள். இந்த சம்பவத்தில் நாங்கள் நியாயம் கேட்டு மட்டுமே புகார் அளிக்கிறோம், மற்றபடி பழிவாங்கவோ அல்லது விளம்பரத்திற்காகவோ அல்ல” என்று குறிப்பிட்டுள்ளார்.

“கடந்த 2025ஆம் ஆண்டு என் மகளுடன் பழக ஆரம்பித்த பகீரத், தொடர்ந்து உடல் உறவுகளுக்கு ஊக்குவித்து வருகிறான்.

மது அருந்திவிட்டு உடல் உறவுக்கு வற்புறுத்துவதால், எனது மகள் வீட்டை விட்டு வெளியே செல்வதற்கு பயப்படுகிறாள்.

இந்த சம்பவம் தொடர்பாக என்னிடம் வாட்ஸ்அப் உரையாடல்கள் மற்றும் போதுமான ஆதாரங்கள் உள்ளன.

ஏப்ரல் 21ஆம் தேதியன்று எங்கள் குடும்பத்தினர் மீது மிரட்டல் மற்றும் பணம் பறித்தல் குற்றச்சாட்டுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

கடந்த ஏப்ரல் 23 அன்று எங்களை நேரில் சந்தித்த அமைச்சர் மிரட்டல் விடுக்கிறார்” என்று பாதிக்கப்பட்ட பெண்ணின் தாயார் கூறியுள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com