

மத்திய கிழக்கில் தொடர்ந்து போர்பதற்றம் நிலவிவரும் சூழலில், பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்த்தப்படும் என இந்திய ரிசர்வ் வங்கியின் ஆளுநர் சஞ்சய் மல்ஹோத்ரா தெரிவித்துள்ளார்.
சுவிட்சர்லாந்தில் நடைபெற்ற மாநாட்டில் கலந்துகொண்ட அவர், நிதி சார்ந்த விஷயங்களில் இந்திய அரசு கவனமாக செயல்பட்டு வருவதாக தெரிவித்துள்ளார்.
ஹார்முஸ் நீரிணை வழியாக எண்ணெய் மற்றும் எரிவாயு எடுத்து செல்வதற்கு ஈரான் கடும் கட்டுப்பாடு விதித்துள்ள நிலையில், எரிவாயுக்களின் மீதான விலை உயர்ந்துள்ளதாக மல்ஹோத்ரா தெரிவித்தார்.
கடந்த பிப்ரவரி மாதம் 28 தொடங்கி மத்திய கிழக்கில் தொடர்ந்து போர் நடந்து வரும் சூழலில், இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் மீதான விலை உயர்த்தப்படவில்லை என்றும் ரிசர்வ் வங்கி ஆளுநர் சஞ்சய் மல்ஹோத்ரா தெரிவித்துள்ளார்.