டெல்லி விமான நிலையத்தில் குழப்பம்: ஏர் இந்தியா விமானத்தில் தீ அபாயம்

விமானம் தரையிறங்கும் போது, ​​அதன் இயந்திரத்தில் தீப்பிடித்ததாகவும் புகை தொடர்பான சம்பவம் ஏற்பட்டதாகவும் விமானி தெரிவித்துள்ளார்.
டெல்லி விமான நிலையத்தில் குழப்பம்:
ஏர் இந்தியா விமானத்தில் தீ அபாயம்
Published on

பெங்களூருவிலிருந்து டெல்லி நோக்கிச் சென்ற ஏர் இந்தியா விமானம் ஒன்று, நேற்று இரவு தலைநகரில் உள்ள இந்திரா காந்தி சர்வதேச (IGI) விமான நிலையத்தில் அவசரகால நிலையில் தரையிறக்கப்பட்டது.

இந்நிலையில் அது 171 பயணிகளுடன் இயக்கப்பட்ட AI2802 ரக விமானம் என உறுதிசெய்யப்பட்டது.

விமானம் தரையிறங்கும் போது, ​​அதன் இயந்திரத்தில் தீப்பிடித்ததாகவும் புகை தொடர்பான சம்பவம் ஏற்பட்டதாகவும் விமானி தெரிவித்துள்ளார்.

அதையடுத்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக டெல்லி விமான நிலையத்தில் அதிகாரிகள் அவசரநிலையை அறிவித்ததாக ஏர் இந்தியா தெரிவித்துள்ளது.

விமானிகள் உடனடியாக வான்வழிப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டுக்கு (ATC) தகவல் தெரிவித்தனர்.

மேலும் ஏர்பஸ் A320 ரக விமானம் 29R ஓடுபாதையில் பாதுகாப்பாகத் தரையிறங்கியது.

அச்சம் ஏற்பட்டபோதிலும், விமானம் பாதுகாப்பாகத் தரையிறங்கியதாகவும், அனைத்துப் பயணிகளும் விமான ஊழியர்களும் இயல்பாக வெளியேறியதாகவும் யாருக்கும் காயம் ஏற்படவில்லை எனவும் விமான நிறுவனம் உறுதிப்படுத்தியது.

மேலும் தீ விபத்திற்கான காரணம் குறித்து விமான நிறுவனம் முழுமையான விசாரணையைத் தொடங்கியுள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com