சென்னையில் ஒரே நாளில் 100-க்கும் மேற்பட்ட ரவுடிகள் கைது

நள்ளிரவில் ஸ்பெஷல் டிரைவ் ஆபரேஷன் நடத்திய போலீசார்.
சென்னையில் ஒரே நாளில் 100-க்கும் மேற்பட்ட ரவுடிகள் கைது
Published on

சென்னையில் நள்ளிரவில் போலீசார் ஸ்பெஷல் டிரைவ் ஆபரேஷன் நடத்தினர்.

தாம்பரத்தில் நடந்த "காஞ்சிபுரம் கானா பாடகர்கள்" இரட்டை கொலை வழக்கு தொடர்பாக 100-க்கும் மேற்பட்ட ரவுடிகள் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதில் தி. நகரில் 18 ரவுடிகளும் அடையாறில் 16 ரவுடிகளும் புளியந்தோப்பில் 20 ரவுடிகளும் அண்ணா நகரில் 9 ரவுடிகளும் மைலாப்பூரில் காவல் மாவட்டத்தில் 12 ரவுடிகளும் இரவோடு இரவாக கைது செய்யப்பட்டனர்.

போதைப்பொருள் விற்பவர்கள் மற்றும் முன்வழக்கு உள்ள குற்றவாளிகள் கைது கைதாகியுள்ளனர்.

மேலும் கைது செய்யப்பட்ட 100-க்கும் மேற்பட்ட ரவுடிகளிடமும் சென்னை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com