வங்கி வேலைவாய்ப்பு: நாடு முழுவதும் 6,715 துணை மேலாளர் பணியிடங்கள் அறிவிப்பு-இன்று முதல் விண்ணப்பிக்கலாம்!

தகுதியான விண்ணப்பதாரர்கள் BPS அதிகாரப்பூர்வ இணையதளம் https://www.ibps.in வாயிலாக ஆன்லைனில் மட்டுமே விண்ணப்பிக்க முடியும்.
Bank Recruitment
Published on

நாடு முழுவதும் உள்ள பொதுத்துறை வங்கிகளில் காலியாக உள்ள 6,715 துணை மேலாளர் (PO) மற்றும் மேலாண்மை பயிற்சிபணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை வங்கிப் பணியாளர் தேர்வு முகமை https://www.ibps.in வெளியிட்டுள்ளது.

இப்பணிகளுக்கு தகுதியும் விருப்பமும் உள்ள பட்டதாரிகளிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மொத்த பணியிடங்கள்:

6,715

பதவியின் பெயர்:

துணை மேலாளர் (PO) / மேலாண்மை பயிற்சி (MT)

கல்வித் தகுதி:

அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் ஏதேனும் ஒரு துறையில் பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும்.

வயது வரம்பு:

குறைந்தபட்சம் 20 வயது முதல் அதிகபட்சம் 30 வயதுக்குள் இருக்க வேண்டும் (அரசு விதிகளின்படி குறிப்பிட்ட பிரிவினருக்கு வயது வரம்பில் தளர்வுகள் உண்டு).

விண்ணப்பிக்கத் தொடங்கும் நாள்:

ஜூலை 1, 2026 (இன்று)

விண்ணப்பிக்கக் கடைசி நாள்:

ஜூலை 21, 2026

முதல்நிலைத் தேர்வு:

ஆகஸ்ட் 2026

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் BPS அதிகாரப்பூர்வ இணையதளம் https://www.ibps.in வாயிலாக ஆன்லைனில் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். விண்ணப்பக் கட்டணம் மற்றும் கூடுதல் விவரங்களை இணையதளத்தில் உள்ள விரிவான அறிவிப்பைக் கண்டு தெரிந்து கொள்ளலாம். வங்கித் துறையில் கால்பதிக்க நினைக்கும் இளைஞர்களுக்கு இது ஒரு நல்ல வாய்ப்பாகும்.

X

Maalai Malar
www.maalaimalar.com