260 பேர் உயிரிழந்த அகமதாபாத் ஏர் இந்தியா விமான விபத்து - முழுவிவர அறிக்கை தயாரிப்பு

தொழில்நுட்ப கோளாறால் விபத்தில் சிக்கி 260 நபர்கள் உயிரிழந்த சம்பவத்தில், விபத்திற்கான காரணத்தை வெளியிட்ட அமைச்சர்.
260 பேர் உயிரிழந்த
அகமதாபாத் ஏர் இந்தியா விமான விபத்து - முழுவிவர அறிக்கை தயாரிப்பு
Published on

கடந்த 2025-ஆம் ஆண்டு ஜூன் மாதம் அகமதாபாத் விமான நிலையத்திலிருந்து லண்டன் நோக்கிப் புறப்பட்ட ஏர் இந்தியா போயிங் 787 விமானம், தொழில்நுட்பக் கோளாறு காரணமாக, குஜராத்தில் உள்ள மருத்துவக் கல்லூரி விடுதியின் மீது மோதி விபத்துக்குள்ளானதில் 260 நபர்கள் உயிரிழந்தனர்.

இந்த விபத்து குறித்த விரிவான புலனாய்வு விசாரணையை மேற்கொண்டு வரும் விமான பாதுகாப்பு அதிகாரிகள், இறுதிக்கட்ட ஆய்வுகளை நிறைவு செய்துள்ளதாகவும், குறிப்பாக விமான என்ஜின்களில் எரிபொருள் விநியோகம் தடைபட்டதற்கான பின்னணியில் உள்ள தொழில்நுட்பக் காரணங்களை கண்டு பிடித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

மேலும் இதற்கான முழு விவர அறிக்கை அடுத்த மாதம் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படும் என்றும் விமான பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கான இழப்பீடு மற்றும் பாதுகாப்பு வழிமுறைகளை மேம்படுத்துவது குறித்து மத்திய அரசாங்கத்திடம் பேசி ஆலோசனை நடத்தி வருவதாகவும், மத்திய சிவில் விமான போக்குவரத்து துறை அமைச்சர் ராம்மோகன் நாயுடு தெரிவித்துள்ளார்.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com