நாளை முதல் மும்பையில் கனமழைக்கு வாய்ப்பு

வங்காளா விரிகுடா கடல் பகுதியில் ஒரு புதிய காற்றழுத்த சுழற்சி உருவாகி உள்ளதாக வானிலை ஆய்வு மையம் அதிகாரி தெரிவித்துள்ளார்.
கோப்புபடம்
கோப்புபடம்
Published on

மும்பை: 

மராட்டியத்தில பருவமழைக்காலம் நடைபெற்று வருகிறது. கடந்த சில நாட்களாக மும்பையில் ஆங்காங்கே சிறிய அளவில் மழை பெய்து வருகிறது. இந்தநிலையில் மும்பை மற்றும் விதர்பா மண்டலத்தில் நாளை (திங்கட்கிழமை) முதல் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து வானிலை ஆய்வு மைய அதிகாரி ஒருவர் கூறுகையில், “வங்காளா விரிகுடா கடல் பகுதியில் ஒரு புதிய காற்றழுத்த சுழற்சி உருவாகி உள்ளது. இது மேலும் தீவிரமடையும் என்பதால் வருகிற 20-ந் தேதி முதல் மராட்டியத்தில் கனமழை பெய்யும்.

விதர்பா மண்டலத்தில் முதலில் மழை தொடங்கும். ஓரிரு இடங்களில் மிக கனமழை பெய்யவும் வாய்ப்பு உள்ளது. இதை தொடர்ந்து வடக்கு மராட்டியத்தில் உள்ள பால்கர், தானே மற்றும் மும்பை உள்ளிட்ட கடலோர மாவட்டங்களிலும் மழை பெய்யும் என கூறினார்.

X

Maalai Malar
www.maalaimalar.com