தொடரும் விலை ஏற்றம் - இன்றும் பெட்ரோல் 24 காசுகள், டீசல் 31 காசுகள் விலை உயர்வு

சென்னையில் பெட்ரோல் விலை இன்று லிட்டருக்கு 24 காசுகள் அதிகரித்து ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.85.50-க்கும், டீசல் லிட்டருக்கு 31 காசுகள் உயர்ந்து 78.35-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. #FuelPriceHike #PetrolDieselPriceHike
தொடரும் விலை ஏற்றம் - இன்றும் பெட்ரோல் 24 காசுகள், டீசல் 31 காசுகள் விலை உயர்வு
Published on

சென்னை:

பெட்ரோல்-டீசல் விலை கடந்த 2 மாதங்களாக தொடர்ந்து உயர்ந்த வண்ணமாய் இருந்தது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து உயர்ந்து வருதல், கச்சா எண்ணெய் உற்பத்தி சற்று குறைதல் மற்றும் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு தொடர்ந்து சரிவை சந்தித்து வருவதாலும் இந்த விலை உயர்வு ஏற்படுகிறது.

மத்திய அரசு ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு 2.50 ரூபாய் குறைக்கப்படும் என சமீபத்தில் அறிவித்ததை தொடர்ந்து பெட்ரோல், டீசல் விலை உயராமல் இருந்தது. 

இதையடுத்து, கடந்த சில நாட்களாக எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல், டீசல் விலையை மீண்டும் உயர்த்த தொடங்கியுள்ளன.

சென்னையில் நேற்று பெட்ரோல் ரூ.85.26-க்கும், டீசல் ரூ.78.04-க்கும் விற்பனை செய்யப்பட்டது. இந்நிலையில், இன்றும்  பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் உயர்த்தி உள்ளன. அதன்படி, பெட்ரோல் விலையில் 24 காசுகள் உயர்ந்து, 85.50 ரூபாய்க்கும், டீசல் விலையில் 31 காசுகள் உயர்ந்து 78.35 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

அதிகரித்து வரும் பெட்ரோல் - டீசல் விலை உயர்வு பொதுமக்களை கவலையில் ஆழ்த்தியுள்ளது. #FuelPriceHike #PetrolDieselPriceHike

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com