கண் அறுவை சிகிச்சை: எடப்பாடி பழனிசாமி குணம் அடைந்தார்

கண் அறுவை சிகிச்சை செய்து கொண்ட முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பூரண குணமடைந்துள்ளதால், 2 நாட்களில் தலைமைச் செயலகம் வருவார் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
கண் அறுவை சிகிச்சை: எடப்பாடி பழனிசாமி குணம் அடைந்தார்
Published on

சென்னை:

முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு கடந்த 4-ந்தேதி காலை 7 மணிக்கு தி.நகர் வள்ளுவர் கோட்டம் அருகே உள்ள ராஜன் கண் மருத்துவமனையில் கண்புரை நீக்கம் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.

சென்னை அரசு கண் மருத்துவமனையின் இயக்குனர் டாக்டர் மகேஸ்வரி மேற்பார்வையில் இந்த ஆபரேசன் நடைபெற்றது. அன்றைய தினமே எடப்பாடி பழனிசாமி வீடு திரும்பினார். 4 நாட்கள் ஓய்வு எடுக்கும் படி அறிவுறுத்தி இருந்தனர்.

ராஜன் கண் மருத்துவமனை டாக்டர் மோகன்ராஜன் நேற்று முதல்- அமைச்சர் எடப் பாடிபழனிசாமி இல்லத்திற்கு சென்று அவரது கண்களை பரிசோதித்து பார்த்தார். இதில் அவர் நன்றாக குணம் அடைந்திருந்தது தெரியவந்தது.

இதனால் வழக்கமான பணிகளை கவனிக்கலாம் என்று கூறி உள்ளனர். இதைத் தொடர்ந்து ஓரிரு நாளில் எடப்பாடி பழனிசாமி கோட்டைக்கு வர உள்ளார். அனேகமாக நாளை மறுநாள் (9-ந்தேதி) அவர் கோட்டைக்கு வர வாய்ப்புள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். #Tamilnews

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com