நர்சு சீருடை மாறுகிறது: குட்டை பாவாடைக்கு ‘குட்பை’

தமிழக அரசு மருத்துவமனைகளில் பணிபுரியும் நர்சுகளின் சீருடையை மாற்ற தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இதற்காக பல்வேறு மாதிரிகளில் நர்சுகளுக்கான உடை பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
நர்சு சீருடை மாறுகிறது: குட்டை பாவாடைக்கு ‘குட்பை’
Published on

சென்னை:

தமிழக அரசு மருத்துவமனைகளில் மூன்று பிரிவாக நர்சுகள் பணிபுரிந்து வருகிறார்கள்.

கிரேடு- I, II, III எனப்படும் அந்த மூன்று பிரிவுகளில் சுமார் 20 ஆயிரம் பேர் உள்ளனர்.

ஆங்கிலேயர்கள் காலத்தில் உருவாக்கப்பட்ட சீருடைகளையே அரசு நர்சுகள் அணிகிறார்கள். பெண் நர்சுகள் குட்டைப் பாவாடை போன்ற உடுப்பு அணிந்து நீண்ட சாக்ஸ்சுடன் பணிக்கு வருகிறார்கள்.

இந்த சீருடை தற்போதைய பணிகளுக்கு மிகவும் அசவுகரியமாக இருப்பதாக கூறப்பட்டு வந்தது. இதையடுத்து நர்சுகளின் சீருடையை மாற்ற வேண்டும் என்று நீண்ட நாட்களாக கோரிக்கை உள்ளது.

அதன் பேரில் நர்சுகளின் சீருடையை மாற்ற தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இதற்காக பல்வேறு மாதிரிகளில் நர்சுகளுக்கான உடை பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

ஆண் நர்சுகளுக்கு பேண்ட், வெள்ளை நிற ஓவர்கோட் அணியலாம் என்று பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. பெண் நர்சுகள் பேண்ட் மற்றும் சேலை அணியும் வகையில் சீருடைகள் வடிவமைக்கப்பட்டுள்ளது.

புதிய சீருடைகளுக்கு அரசு ஒப்புதல் வழங்கி விட்டதாக தெரிகிறது. எனவே புதிய சீருடைகள் விரைவில் அமலுக்கு வர உள்ளது.

குட்டை பாவாடை விடை பெற்று பேண்ட் மற்றும் சேலை நர்சுகளின் சீருடையாக வர உள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com