தேவாரத்தில் வீடு புகுந்து நகை திருடிய சிறுவன் கைது

தேவாரத்தில் வீடு புகுந்து நகை திருடிய சிறுவன் கைது செய்யப்பட்டான்.
வீடு புகுந்து நகை கொள்ளை கைது
வீடு புகுந்து நகை கொள்ளை கைது
Published on

தேனி:

தேவாரம் வடக்கு தெருவைச் சேர்ந்தவர் முத்துச் செல்வம் (வயது 29). சம்பவத்தன்று இவர் வீட்டை பூட்டி விட்டு வெளியூர் சென்று விட்டார். திரும்பி வந்து பார்த்தபோது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு கிடந்தது. அப்போது உள்ளே பார்த்த போது ஒரு சிறுவன் அங்கிருந்த பெட்டியை உடைத்து அதில் இருந்த ½ பவுன் கம்மலை திருடியது தெரிய வந்தது. இதையடுத்து முத்துச்செல்வம் திருடன்... திருடன்... என சத்தம் போட்டார்.

இதனால் அந்த சிறுவன் ஓட்டம் பிடித்தான் அக்கம் பக்கத்தினர் திரண்டு அவனை மடக்கி பிடித்தனர். பின்பு அவன் தேவாரம் போலீசில் ஒப்படைக்கப்பட்டான். போலீசார் வழக்கு பதிவு செய்து சிறுவனை கைது செய்து சிறுவர் சீர்திருத்த பள்ளிக்கு அனுப்பி வைத்தனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com