

தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் மத்திய மண்டல கமிஷனர் தலைமையிலான தேர்தல் பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வந்தனர்.
அப்போது நாராயண்குடா கிளை இந்தியன் வங்கியில் இருந்து ரூ.8 கோடி ரொக்க பணம் எடுக்கப்பட்டு ஒரு காரில் எடுத்து வரப்பட்டதாக தகவல் கிடைத்தது.
உடனே பறக்கும் படையினர் நாராயண்குடா போலீசாருடன் விரைந்து சென்று ஹிமாயத்யஹார் சந்திப்பில் மடக்கி சோதனை நடத்தினர். அந்த காரில் டிரைவர் குடாசங்கர் மற்றும் தோஷரெட்டி, பிரதீப் ரெட்டி ஆகிய 3 பேர் இருந்தனர்.
அவர்களிடம் ரூ.2 கோடி ரொக்கப்பணம் இருந்தது. அவற்றை பறிமுதல் செய்தனர். பின்னர் நடத்தப்பட்ட விசாரணையில் அந்த பணம் பா.ஜனதா கட்சிக்கு சொந்தமானது என்றும், நாராயண்குடா கிளை இந்தியன் வங்கியில் இருந்து நந்திராஜு கோபி என்பவர் தங்களிடம் கொடுத்ததாகவும், பிரதீப் ரெட்டி தெரிவித்தார்.
உடனே வங்கிக்கு விரைந்து சென்ற போலீசார் அங்கிருந்த கோபி உள்ளிட்ட 4 பேரை மடக்கி பிடித்து கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ6 கோடி கைப்பற்றப்பட்டது. மொத்தம் ரூ.8 கோடி பறிமுதல் செய்யப்பட்டது.
இதுகுறித்து தெலுங்கானா மாநில பா.ஜனதா கட்சியின் செய்தி தொடர்பாளர் கிருஷ்ணா சாகர்ராவ் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது பறக்கும் படையினரால் பறிமுதல் செய்யப்பட்ட பணம் பா.ஜனதா கட்சிக்கு சொந்தமானது. எங்களது கணக்காளர் கோபி கட்சி அலுவலகத்துக்கு அந்த பணத்தை எடுத்து வரச் சென்றார்.