

தமிழக வெற்றிக் கழகத்திற்கு காங்கிரஸ், இரண்டு இடது சாரிகள், விசிக, ஐ.யு.எம்.எல். ஆதரவு அளித்துள்ளதால் ஆட்சி அமைப்பதற்கான 118 இடங்களை தாண்டி 120 இடங்கள் கிடைத்துள்ளன. இதனைத் தொடர்ந்து இன்று இரவு 4-வது முறையாக ஆளுநர் அர்லேகரை சந்தித்து, ஆதரவு கடிதங்களை வழங்கி ஆட்சி அமைக்க அழைப்பு விடுக்கக்கோரி அழைப்பு விடுத்தார். அப்போது நாளை மாலை 3 மணிக்கு பதவி ஏற்க விஜய் நேரம் கேட்டார்
விஜய், இடதுசாரி தலைவர்கள், த.வெ.க. தலைவர்கள் ஆளுநர் அர்லேகரிடம் சுமார் ஒரு மணி நேரம் தீவிர ஆலோசனை நடத்தினர். அதனைத் தொடர்ந்து நாளை மாலை 3 மணிக்கு பதவி ஏற்று வைக்க ஆளுநர் சம்மதம் தெரிவித்துள்ளார். விஜய் முதலமைச்சராக பதவி ஏற்றதும், அவருடன் 9 பேர் அமைச்சர்களாக பதவி ஏற்க வாய்ப்புள்ளது.
நாளை மாலை நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் பதவி ஏற்புவிழா நடைபெறுகிறது. இதற்காக நேரு உள்விளையாட்டு அரங்கம் தயாராகி வருகிறது.