

பக்ரீத் பண்டிகை, முகூர்த்த தினம் மற்றும் வார இறுதி நாள் விடுமுறையை முன்னிட்டு பயணிகள் தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
இந்நிலையில் நேற்று தமிழ்நாடு போக்குவரத்துத் துறை அமைச்சர் தமிழன் பார்த்திபன் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது பயணிகள் போதிய பேருந்துகள் இல்லையென்றும், முன்பதிவு செய்யப்பட்ட பேருந்துகளில், முன்பதிவு செய்யாத பயணிகளை ஏற்றி அனுப்பி வைத்ததால், முன்பதிவு செய்த பயணிகள் கடும் அவதியடைவதாகவும் தெரிவித்தனர்.
மேலும் பயணி ஒருவர் முன்பதிவு பேருந்துக்காக ஒருமணிநேரம் காத்திருப்பதாகவும் தெரிவித்தார். அதற்கு பதிலளித்த போக்குவரத்து துறை அமைச்சர்,
நீ நல்லா சாப்டுருக்க, நான் சாப்பிடக்கூட இல்லை என மூன்று நான்கு முறைக்கூறிய அமைச்சர், தயவுசெய்து புரிந்துகொள் நான் சாப்பிடனும் என சொல்லிவிட்டு அங்கிருந்து சென்றார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் புயலை கிளப்பியுள்ளது.
ஆய்வுக்காக வந்த அமைச்சர் பயணியின் கேள்விக்கு இப்படித்தான் பதிலளிப்பாரா? பின் எதற்கு அவர் ஆய்வு மேற்கொண்டார்? ஒரு துறையின் அமைச்சர் இவ்வாறுதான் பொறுப்பில்லாமல் பதிலளிப்பாரா? எனவும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.