யூடியூபர் சவுக்கு சங்கர் தாயார் மறைவு - இ.பி.எஸ். இரங்கல்

சவுக்கு சங்கர் தாயாரின் மறைவுக்கு இபிஎஸ் இரங்கல் தெரிவித்துள்ளார்.
யூடியூபர் சவுக்கு சங்கர் தாயார் மறைவு - இ.பி.எஸ். இரங்கல்
Published on

பிரபல யூடியூபர் சவுக்கு சங்கரின் தாயார் கமலா இன்று உடல்நலக் குறைவால் காலமானார். சவுக்கு சங்கர் தற்போது குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு, புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இச்சூழலில் இந்த சோக நிகழ்வு நடந்துள்ளது.

இந்நிலையில் தாயார் கமலாவின் மறைவிற்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ளப் பதிவில்,

யூடியூபர் சவுக்கு சங்கரின் தாயார் கமலா அம்மாள் அவர்கள் உடல்நலக்குறைவால் காலமானார் என்ற செய்தி கேட்டு மிகுந்த துயருற்றேன்.

தனது மகன் திமுக அரசை எதிர்த்து பேசிய ஒரே காரணத்திற்காக, கமலா அம்மாள் திமுக அரசின் காவல்துறையால், திமுக மற்றும் கூட்டணி கட்சி குண்டர்களால் சந்தித்த துயரங்கள் ஏராளம்.

வயதான தாய் என்று கூட பாராமல் அவரும் கடும் துயருக்கும், மன உளைச்சலுக்கும் ஆளாக்கப்பட்டார். இந்நிலையில், கமலா அம்மாள் மாரடைப்பால் உயிரிழந்த செய்தி மிகுந்த வேதனை அளிக்கிறது.

பாசமிகு தாயாரை இழந்து வாடும் சவுக்கு சங்கருக்கு எனது ஆழ்ந்த இரங்கல். மறைந்த கமலா அம்மாள் அவர்களின் ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.” எனக் குறிப்பிட்டுள்ளார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com