

திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் கோவில் வைகாசி விசாக தேரோட்டத்தின்போது விபத்து ஏற்பட்டுள்ளது பரபரப்பை ஏற்பட்டுள்ளது.
தேரோட்டத்தின்போது தேர் திரும்புகையில் சக்கரத்திற்கும் சுவற்றுக்கும் இடையில் ஹர்ஷவர்தன் (19) என்கிற இளைஞர் சிக்கினார்.
தேர் சக்கரத்தில் சிக்கிய ஹர்ஷவர்தனை பலத்த காயங்களுமன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது. இந்நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
மேலும், பலத்த காயமடைந்த கல்லூரி மாணவன் சஷ்டிகன் (19), தீவிர சிகிச்சையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்த துயர சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.