

கடலூரில் உள்ள வெள்ளி கடற்கடையில் இன்று காலை 11 மணியளவில் தொடர்ந்து இடி, மின்னலுடன் மழை பெய்து வந்தது.
இந்நிலையில் கடலூர் புதுப்பாளையத்தை சேர்ந்த ஹரிஹரன், விஷால் மற்றும் ரவி என்ற 3 இளைஞர்கள் மழையின் போதும் மோட்டார் வாகனத்தில் வெள்ளி கடற்கரையை நோக்கி சென்று கொண்டிருந்தனர்.
இந்நிலையில், வெள்ளி கடற்கரையில் எதிர்பாராத விதமாக பயங்கரமான சத்தத்துடன் இடி, மின்னல் ஏற்பட்டது. அப்போது செல்ஃபி எடுத்த இளைஞர் மீதும் மொபைலில் பேசிக்கொண்டிருந்த இளைஞர் ஒருவர் மீதும் மின்னல் பாய்ந்தது.
இதில் ஹரிஹரன் என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
விஷால் மற்றும் ரவி என்பவர்களுக்கு பலத்த காயம் ஏற்பட்டது. தகவல் அறிந்து விரைந்து வந்த கடலூர் போலீசார் உயிரிழந்த இளைஞரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். காயமடைந்த இருவரையும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
இந்த சம்பவத்தை தொடர்ந்து, இடி, மின்னலுடன் கூடிய மழை பெய்யும் போது கடற்கரைகள், வெட்டவெளிகள், நீர்நிலைகள் மற்றும் மரங்களின் அடியில் நிற்பதைத் தவிர்த்து, பாதுகாப்பான கட்டிடங்களுக்குள் அடைக்கலம் புகுவது மிக அவசியம் என்றும் அனைவரும் தனது சுற்றுசுழலுக்கேற்ப நடந்துகொள்ளுமாறும் காவல் துறையினர் பொதுமக்களுக்கு அறிவுறுத்தினர்.