திருமணம் ஆகாத விரக்தியில் ஓடும் பேருந்தில் பாய்ந்து வாலிபர் தற்கொலை

தனியார் பஸ்சின் பின் சக்கரத்தில் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார். அரவிந்த்சாமி தற்கொலை செய்து கொள்ளும்போது போதையில் இருந்ததும் தெரியவந்தது.
திருமணம் ஆகாத விரக்தியில் ஓடும் பேருந்தில் பாய்ந்து வாலிபர் தற்கொலை
Published on

நாகப்பட்டினம் மாவட்டம், தர்மதானபுரம் ஆட்டுக்கால் மண்டபத்தைச் சேர்ந்தவர் அரவிந்த் சாமி (வயது 30). இவர் கடந்த 5 மாதங்களாக புதுச்சேரி, மேட்டுப்பாளையம் பகுதியில் தங்கி இருந்தார். துப்புரவு பணியில் ஈடுபட்டு வரும் வாகனங்களை பழுது நீக்கும் மெக்கானிக்காக வேலை செய்து வந்தார்.

நேற்று மதியம் மேட்டுப் பாளையம் தொழிற்பேட்டை சாலையில் நடந்து சென்று கொண்டிருந்த அரவிந்த்சாமி, திடீரென அவ்வழியாக வந்த தனியார் பஸ்சின் பின் சக்கரத்தில் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார்.

தகவலறிந்த மேட்டுப்பாளையம் சப்- இன்ஸ்பெக்டர் திருமுருகன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று, அரவிந்த்சாமியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கதிர்காமம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்தனர்.

விசாரணையில் அரவிந்த்சாமி திருமணமாக வில்லை என்ற ஏக்கத்தில் இருந்ததாகவும், இதுகுறித்து சக ஊழியர்களிடம் அவ்வப்போது கூறி வேதனை அடைந்து வந்ததும் தெரியவந்தது.

மேலும், அரவிந்த்சாமி தற்கொலை செய்து கொள்ளும்போது போதையில் இருந்ததும் தெரியவந்தது. ஓடும் பஸ்சில் அரவிந்தசாமி பாயும் வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

X

Maalai Malar
www.maalaimalar.com