மதுபாரில் ஏற்பட்ட மோதலில் இளம்பெண் படுகொலை - முக்கிய குற்றவாளி கைது

காரில் 6 பேர் இருந்ததாக கூறப்படும் நிலையில், மற்றவர்களை தேடி வந்தனர்.
மதுபாரில் ஏற்பட்ட மோதலில் இளம்பெண் படுகொலை - முக்கிய குற்றவாளி கைது
Published on

சென்னை கோயம்பேட்டில் மதுபான பாரில் நடனம் ஆடும்போது இருதரப்பினரிடையே ஏற்பட்ட தகராறில், யான்சி என்ற இளம்பெண் கார் ஏற்றி கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மதுபாரில் இரு தரப்பை சேர்ந்தவர்கள் மது அருந்தி உள்ளனர். அப்போது நடனம் ஆடுவது தொடர்பாக அவர்களுக்கு இடையே திடீரென மோதல் ஏற்பட்டது. இரு தரப்பை சேர்ந்தவர்களும் ஒருவரை ஒருவர் கைகளால் தாக்கி மோதலில் ஈடுபட்டனர். அங்கு மது அருந்திக்கொண்டிருந்த மற்றவர்கள் அலறியடித்துக்கொண்டு ஓடினார்கள். இரவு 11 மணி அளவில் இந்த சம்பவம் நடைபெற்றதையடுத்து பாதுகாப்பு பணியில் இருந்த பவுன்சர்கள் மோதலில் ஈடுபட்டவர்கள் வெளியேற்றினர்.

பார் வாசலில் மீண்டும் ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்டு மோதலில் ஈடுபட்டனர். இதைத்தொடர்ந்து பவுன்சர்கள் அவர்களை சமாதானம் செய்து அங்கிருந்து செல்லுமாறு எச்சரித்து அனுப்பி வைத்தனர்.

பாரிலிருந்து வெளியே வந்து இருசக்கர வாகனத்தில் சென்றுக்கொண்டிருந்தபோது கார்மூலம் எதிர்தரப்பினர் இடித்துள்ளனர். இதில் இலங்கை தமிழரான யான்சி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மற்றொருவர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பாக தகவலறிந்த காவல்துறை கொலைவழக்குப் பதிவு செய்து விசாரணையை நடத்தினர். முதற்கட்டமாக சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி விசாரித்ததில் பாலகுரு என்ற இளைஞரை கைது செய்துள்ளனர். காரில் 6 பேர் இருந்ததாக கூறப்படும் நிலையில், மற்றவர்களை தேடி வந்தனர்.

இந்நிலையில் முக்கிய குற்றவாளியான சுமன் சக்திவேல் மற்றும் அவரது நண்பர்கள் என 6 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com