சென்னையில் கார் ஏற்றி இளம்பெண் கொலை - ஒருவர் கைது!

இருசக்கர வாகனத்தில் செல்லும்போது கார்மூலம் இடித்து கொலை செய்துள்ளனர்.
சென்னையில் கார் ஏற்றி இளம்பெண் கொலை - ஒருவர் கைது!
Published on

சென்னை கோயம்பேட்டில் மதுபான பாரில் நடனம் ஆடும்போது இருதரப்பினரிடையே ஏற்பட்ட தகராறில், யாசினி என்ற இளம்பெண் கார் ஏற்றி கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பாரிலிருந்து வெளியே வந்து இருசக்கர வாகனத்தில் சென்றுக்கொண்டிருந்தபோது கார்மூலம் எதிர்தரப்பினர் இடித்துள்ளனர். இதில் இலங்கை தமிழரான யாசினி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மற்றொருவர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பாக தகவலறிந்த காவல்துறை கொலைவழக்குப் பதிவு செய்து விசாரணையை தொடங்கியுள்ளனர். முதற்கட்டமாக சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி விசாரித்ததில் பாலகுரு என்ற இளைஞரை கைது செய்துள்ளனர். காரில் 6 பேர் இருந்ததாக கூறப்படும் நிலையில், மற்றவரை தேடிவருகின்றனர்.

இதனிடையே இறந்த பெண்ணிண் தாயார் கதறி அழும் காட்சிகள் வெளியாகி சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com