கணவர் வேறு பெண்ணை மணந்ததால் காதல் திருமணம் செய்த இளம்பெண் தற்கொலை- உறவினர்கள் மறியல்

தீபனின் பெற்றோர் அவருக்கு 2-வது திருமணம் செய்து வைக்க முடிவு செய்தனர். அரக்கோணம் இன்ஸ்பெக்டர் பாரதி மறியலில் ஈடுபட்டவர்களிடம் நடவடிக்கை எடுப்பதாக கூறினார்.
ராஜேஸ்வரி (உள்படம்) - உறவினர்கள் சாலை மறியல் செய்த காட்சி
ராஜேஸ்வரி (உள்படம்) - உறவினர்கள் சாலை மறியல் செய்த காட்சி
Published on

அரக்கோணம்:

ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அடுத்த குறிஞ்சி நகரை சேர்ந்தவர் ராஜேஸ்வரி (வயது 24). இவரும் தீபன் (27) என்பவரும் காதலித்து வந்தனர். கடந்த 6 மாதத்திற்கு முன்பு சென்னையில் இருவரும் பதிவு திருமணம் செய்து கொண்டனர்.

தீபனின் பெற்றோர் ராஜேஸ்வரிடம் வரதட்சணை கேட்டதாக கூறப்படுகிறது. இதனால் கோபித்துக்கொண்டு தனது தாயார் வீட்டுக்கு ராஜேஸ்வரி ஒரு மாதத்திற்கு முன்பு சென்று விட்டார்.

இந்த நிலையில் தீபனின் பெற்றோர் அவருக்கு 2-வது திருமணம் செய்து வைக்க முடிவு செய்தனர்.

பின்னர் தீபனுக்கு திருமணம் நடந்ததாக கூறப்படுகிறது.

இதனை அறிந்த ராஜேஸ்வரி அதிர்ச்சி அடைந்தார். மேலும் தனது டைரியில் கணவர் தீபன் 2-வது திருமணம் செய்து கொண்டத்தால் மன உளைச்சலில் உள்ளேன் என்று எழுதி வைத்துவிட்டு வீட்டின் அறையில் நேற்று காலை தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதில் ஆத்திரமடைந்த ராஜேஸ்வரியின் உறவினர்கள் இன்று அரக்கோணம் டவுன் போலீஸ் நிலையம் அருகே திரண்டனர்.

அரக்கோணம்-திருவள்ளூர் நெடுஞ்சாலையில் ராஜேஸ்வரி சாவுக்கு காரணமானவர்களை கைது செய்யக்கோரி மறியலில் ஈடுபட்டனர்.

தகவல் அறிந்து விரைந்து வந்த அரக்கோணம் இன்ஸ்பெக்டர் பாரதி மறியலில் ஈடுபட்டவர்களிடம் நடவடிக்கை எடுப்பதாக கூறினார்.

இதனால் மறியலில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர். மேலும் போலீசார் வழக்கு பதிவு செய்து தீபனிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த சம்பவம் அரக்கோணம் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com